திருக்கோயிலின் ஆண்டு விழாக்கள் மற்றும் பூஜைகள்

 

சேவை நேரம் :

சனிக்கிழமை : 6.00 am - 9.00 pm

விழாக்கால மாத்ததில் :

சனிக்கிழமை தோறும் திருக்கோவிலின் உச்சியில் திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். இதனை கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் உள்ள பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

சேவை நேரம் :

வெள்ளி : காலை 6.00 முதல் - இரவு 9.00 வரை

சனி : காலை 6.00 முதல் - இரவு 9.00 வரை

ஞாயிறு : காலை 6.00 முதல் - மதியம் 2.00 வரை

புரட்டாசி திருவிழா காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடிபகவான் பூஜை வாங்கும். அந்நிகழ்ச்சி வழக்கமாக புரட்டாசி மாதத்தில் தான் நடைபெறும். இடி பகவான் பூஜையின் போது சுவாமி இருக்கும் கட்டிடத்தின் மேற்புறம் விரிசல் ஏற்படுவதும் பின் சுவாமியின் திருவருளால் விரிசல் ஒன்று சேர்வதும் இன்றும் நடந்து வரும் ஒரு அதிசயம்.

சித்திரை, ஆவணி, மார்கழி மற்றும் தை :

சித்திரை மாத விழா, ஆவணி மாத கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மாதம் நவராத்திரி வி.ழா மற்றும் விஜயதசமி அம்புசேர்வை, மார்கழி மாதம் ஏகாதேசி, தை மாதம் பொங்கல் விழா, தை திருவோண நட்சத்திரத்தில் திருக்கோடித் தீபம் ஏற்றுதல், அனு தினமும் பூஜை, சனிக்கிழமை தோறும் திருக்கோவிலின் உச்சியில் திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். இதனை கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் உள்ள பக்தர்கள் கண்டுகளிப்பார்கள்.

ஆடி :

ஆடி பதினெட்டு அன்று மலையில் இருந்து கருப்பண்ணசுவாமியின் மகிமை தடியை கொண்டு வந்து காவிரி ஆற்றில் நீராட்டி, மதியம் பூஜை செய்யும் பொழுது கருப்பண்ண ச சுவாமியின் மகிமை தடி தானாக நிற்கும், அப்போது ஆகாயத்தில் கருடன் தடியை சுற்றி வட்டமிடும். இக்காட்சியை காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து கோவிந்தனின் பெயரை உறக்க கூறி வழிபடுவார்கள். இது ஒரு கண்கொள்ளாகாட்சியாகும்.

மஹா கும்பாபிஷேகம் படங்கள்:
 
 
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.