தலைமலையில் கிரிவலம்
அலகு குத்துதல், தீமித்தல், அக்னிசட்டி எடுத்தல், மொட்டை அடித்தல் என்று பல்வேறு விதமான நேர்த்தி கடன்களை பக்தர்கள் கடவுளின் மேல் வைத்துள்ள நம்பிக்கையால் காலம் காலமாக செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தின் எல்லையிலும் , நாமக்கல் மாவட்டத்தின் தொடக்கத்திலும் அமைந்துள்ளது. இந்த மலையானது மல்லாந்து படுத்திருக்கும் பெருமாளின் மார்பளவு தோற்றத்தை உடையது. மலை உச்சியில், நல்லேந்திர பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இம்மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. சிரம் என்றால் 'தலை', கிரி என்றால் 'மலை'.

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற போரின் போது இந்திரஜித் பயன்படுத்திய அஸ்திரத்தினால் ராமன் உள்ளிட்ட சேனைகள் மயக்கமுற்று விழுந்தன. இவர்கள் மயக்கத்தை போக்கி காப்பாற்ற சஞ்சீவி மூலிகை தேவைப்பட்டது. எனவே, முனிவர்களின் ஆலோசனைப்படி அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார்.மலையின் மீது மோதி திரும்பி மூலிகை காற்று பட்டதால் ராமனின் சேனைகள் மூர்ச்சையிலிருந்து விடுபட்டு எழுந்தனர். எடுத்து வரப்பட்ட அரியவகை மூலிகை மலையை எடுத்து இடத்திலேயே வைத்து வருமாறு ராமன் அனுமனுக்கு ஆணையிட்டார். அனுமன் மலையைசை திரும்ப எடுத்து சென்றார். அப்போது அதிலிருந்து சிதறி விழுந்ததில் தலைமை பகுதியாக கருதப்படுவதால் இதற்கு தலைமலை என்ற பெயரும் உண்டு. இந்த மலையில் ஏராளமான மூலிகை செடிகளும் , அரிய மரங்களும் உள்ளன. மலையின் உச்சியில் அமைந்துள்ள நல்லேந்திர பெருமாள் சன்னதியின் சுற்றுப்புறத்தில் 4,500 அடி பள்ளதாக்கின் அருகே எவ்வித பிடிமானமும் இல்லாமல் மூன்று அங்குல விளிம்பில் பாதத த்தினை பதித்து சுமார் 60 அடி தொலைவை பக்தர்கள் கடந்து வருகின்றனர். திருமண பாக்கியம் வேண்டியும், செல்வம் சுபிட்சத்தோடு வாழ்வதற்கு பெருமாளின் அருளை வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இந்த கிரிவலத்தை பக்தியுடன் சுற்றி வருகின்றனர்.

மலைப்பாதையின் வழியில் சீதையின் தாகத்தை தவிர்ப்பதற்காக ராமன் உருவாக்கிய சுனை ஒன்று உள்ளது. கோவிலில் நல்லேந்திர பெருமாள், வெங்கடாஜலபதி, அலமேலு மங்கை தாயார், மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருப்பண்ண சாமி உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள கன்னிமார் சுனையில் நீராடி நல்லேந்திர பெருமாளை வழிப்பட்டால் சனிதோஷம் நீங்கும என்பது ஐதீகம். நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் பல ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் மலை உச்சியில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

கரடு முரடான பாதைகளில் பலமணி நேர பயணத்திற்கு பின்னரே பெருமாளை தரிசிக்க இயலும். பாதைகள் சீரமைப்பும், மினசார வசதிகளும், விழா காலங்களில் மருத்துவ குழுவினரின் உதவியும், பக்தர்களின் பாதுகாப்பிற்கு காவல் துறையும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் பூலோகத்தின் வைகுண்டாமகவே தலைமலை காட்சி அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. சில பக்தர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மழையேறி நல்லேந்திர பெருமாளை தரிசித்தும் வருகின்றனர். அடிவாரத்தில் ஸ்ரீலட்சுமி நாராயாண, பூமி நீளாதேவி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

கோவில் பரம்பரை அறங்காவலர் நந்தகோபன், சடகோபன், ரெங்கநாயகி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இம்மலைக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
 
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.