இதர கோவில்கள் :

தலைமலை அருள்மிகு நல்லேந்திர பெருமாள் திருக்கோவிலுக்கு வலதுபுறம் அலமேலு மங்கை தாயார் ஆலயம் அமைந்துள்ளது. அருள்மிகு கிருஷ்ணன் கோவிலும் , அதற்கு அடுத்தபடியாக அருள்மிகு வரபிரசாதி ஆஞ்சநேயர் கோவிலும், அதற்கு அடுத்தபடியாக கன்னிமார் சுனையின் அருகில் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோவிலும், அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும் அமைந்ததுள்ளன.

கன்னிமார் சுனை :

தலைமலையின் நான்கு திசைகளிலும் எவ்வளவு வறட்சி ஏற்பட்ட காலங்களிலும் கன்னிமார் சுனை வற்றுவதில்லை. அதில் நீராடி இங்குள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வழிப்பட்டால் அனைத்து தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.


குழந்தை பேறு :
குழந்தைபேறு அல்லாத மணமக்கள் அருள்மிகு பெருமானை வேண்டிக்கொண்டால் குழந்தைபேறு கிட்டும். குழந்தைபேறு கிட்டிய பின்னர் தலைமலை உச்சியில் உள்ள அருள்மிகு நல்லேந்திர பெருமாள் திருக்கோவில் சுற்றி உள்ள 3 அங்குல அளவில் உள்ள கற்படியை கிரி சுற்றுவது அதிசயத்திலும் அதிசயம் சன்னியாசியப்பனை வேண்டி பெண்கள் தங்களுடைய முந்தானையை கிழித்து தூக்கு கட்டி வேண்டி செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய உடன் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து திருக்கோடி ஏற்றுவார்கள். இத்தீபம் 20 மைல் சுற்றளவுக்கு தெரியும். அதை பக்த கோடிகள் வணங்குகிறார்கள்.

வனபத்திரகாளி திருக்கோயில் :

இத்திருக்கோவில்களுக்கெல்லாம் எதிர்புறம் மேற்கில் அருள்மிகு வன பத்திரகாளி திருக்கோவில். இவ்வனங்களை வெய்யிலிலேயே நின்றபடி காத்து அருள்பாலித்து கொண்டிருப்பதும் ஒரு அதிசயமாகும்.

 
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.